உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் புதிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கப் பயணத்தின்போது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு உதவ அமெரிக்க வாழ் தமிழர்களோடும், முதலீட்டாளர்களிடமும் பேசப்பட் டது. அவர்களும் இங்கே வருவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமும் தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசி யுள்ளோம். அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர். உலக வங்கிக் குழு வருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கப் பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது.
வீட்டுவசதி வாரியத்தின் மூல மாக வீடு இல்லாத ஏழைகளுக்கு முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி யில் வீடுகள் கட்டித்தரப்படும். இப் பணி முடிந்ததும், மேலும் ரூ.5 ஆயி ரம் கோடியில் பணிகள் நடக்கும்.
உசிலம்பட்டி 58-ம் கால்வாய் திட்டம் தொடர்பாக திமுக ஆட்சிக் காலத்தில் தவறான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வைகை அணை நிரம்பி வழியும் போதும், ராமநாதபுரம் பெரிய கண் மாய் நிரம்பி வழியும்போதும்தான் 58-ம் கால்வாயில் தண்ணீர் எடுக்க முடியும். தற்போதுள்ள நிலைமை யைக் கூர்ந்து கவனித்து வருகி றோம். ஏற்கெனவே உள்ள ஆயக் கட்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, இருக்கும் நீரை 58-ம் கால் வாய்க்கு எவ்வாறு வழங்குவது என ஆய்வு நடந்து வருகிறது.
புதிதாக யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இதனால், அதிமுகவுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மக்களவைத் தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். புதிய கட்சிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சேர வாய்ப்பு உண்டு. அரசியலில் எதுவும் நடக்கலாம். அதிமுகவில் தகுதி உள்ளோருக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.