தமிழகம்

சிறுபான்மையினர் பாதிக்கப்படவில்லை: ஜார்ஜ் குரியன் தகவல்

செய்திப்பிரிவு

பாஜக ஆட்சியில் சிறுபான்மை யின மக்கள் பாதிக்கப்படுவதாக விமர்சனம் செய்வது தவறானது என்று தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் சிறுபான்மை பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பெண்களுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வரு கிறது. எனவே, பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக் கப்படுவதாக விமர்சனம் செய் வது தவறானது. நாட்டில் சிறு பான்மையின மக்களை பாதிக்கச் செய்யும் அளவுக்கு பாஜக ஒன்றும் வியாதி கட்சி அல்ல.

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிறு பான்மையினருக்கு நடந்த தாகப் பார்க்காமல் கல்லூரி மாணவி என்ற அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் பார்க்க வேண்டும் என்று மாணவி யின் தந்தை கூறியிருந்ததால் இவ்விவகாரத்தில் ஆணையம் தலையிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT