தமிழகம்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதும் சென்னை யில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவால யத்தில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரு டன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்துவிட்டு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து அமைச் சரவைக் கூட்டத்தில் பேசவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்த நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சர்வாதிகார முறையில் தேர்தலை நடத்தவே மறைமுக தேர்தல் முறையை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது.

திமுக ஆட்சியில் மறைமுக தேர்தல் முறை இருந்தது உண்மை தான். ஆனால், அப்போதைய அரசி யல் சூழலுக்கு ஏற்ப அந்த முடிவு எடுக்கப்பட்டது. உள்ளாட்சி மன்றங் களில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால் மறைமுக தேர்தல் முறை மாற்றப்பட்டது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அவசர சட்டம் தொடர்பாக மற்ற கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள்:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மேயர், நக ராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க அவ சர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோத நடவடிக்கை யாகும். அதிமுகவினர் நேரடியாக வெற்றி பெற முடியாது என்பதால் கவுன்சிலர்கள் மூலம் பதவிகளை அபகரிக்க திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர். இதைவிட ஒரு ஜனநாயக படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது. மறை முக தேர்தலுக்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன்: மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு எக்காரணத்தை கொண்டும் மறைமுக தேர்தல் நடைமுறையைக் கொண்டுவரக் கூடாது. இதனால் பணம், அதிகாரம் ஆகியவை தவறாகப் பயன்படுத்தப் படும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சியில் மறைமுக தேர்வு என்பதே இல்லை. எல்லா பதவிகளுக்கும் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று அறிவித் தார். ஆனால், அவரது பெயரைச் சொல்லி ஆட்சி செய்யும் இந்த அரசு மறைமுகமாக சில பதவி களை தேர்ந்தெடுக்க இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலை வர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாக தேர்ந்தெடுப்பார்கள் என்ற அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமி ழக அரசு உடனடியாக இந்தச் சட் டத்தை திரும்பப் பெற்று, மீண்டும் பழைய முறையில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் தேர்வை நேரடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உள்ளாட்சிகளில் மாநக ராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக் கும் முறையை மாற்றி மறைமுக மாக அவர்களை தேர்வு செய்யும் முறை என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.

மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட் டோரும் மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT