புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பேராசிரியர்கள் அறை, கார் கண்ணாடிகள், கண்காணிப்பு கேமராக் கள் அடித்து நொறுக்கப்பட்டன.
புதுச்சேரி காலாப்பட்டில் அமைந் துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரி கடந்த மாதம் 27-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சகம் அனுப்பிய இரு நபர் குழு பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தியது. இதுதொடர்பான அறிக்கை மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம், விசாரணை அறிக்கை எதிரொலியாக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை விடு முறையில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதன்படி துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி ஒரு வாரம் விடுப்பில் சென்றார். வரும் 24-ம் தேதி வரை துணைவேந்தர் பொறுப்பை கவனித்துக் கொள்ளும் படி பள்ளி கல்வி துறை டீன் லலிதாம்மாவை கேட்டுக் கொண்டு நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டது. இச்சுற்றறிக்கை பல்கலைக்கழக இணையதளத் திலும் வெளியிடப்பட்டது.
இதனால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க (புட்டா) உறுப்பினர் கள் பதிவாளர் அறையை முற்றுகை யிட்டனர். மாணவர்களும் நிர்வாக அலுவலகம் முன்பு கூடினர். லலிதாம்மாவுக்கு துணைவேந்தர் பொறுப்பை வழங்கும் சுற்றக் கையை வாபஸ் பெற வேண்டும் எனக் கோஷமிட்டனர்.
இதையடுத்து பதிவாளர் பன்னீர்செல்வம் சுற்றறிக்கையை வாபஸ் பெற்றுக் கொண்டு, வாழ்க்கை அறிவியல் துறையை சேர்ந்த டீன் டாக்டர் அனிஷா பஷீர் அகமது கானை துணைவேந்தர் பொறுப்பை கவனிக்கும்படி புதிய சுற்றறிக்கை வெளியிட்டார். இதை யடுத்து மாணவர்கள் தரப்பினர் தங்களது போராட்டத்தை தற்காலி கமாக ஒத்திவைப்பதாக அறிவித்த னர்.
திடீர் உடல் நலக்குறைவு
இதற்கிடையே பதிவாளர் பன்னீர் செல்வத்துக்கு நேற்று இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலை யில் பதிவாளர் பன்னீர்செல்வத்தை போராட்டம் நடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டியதாகவும் அதனாலேயே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில் நேற்று அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி, புட்டா சங்க நிர்வாகிகள் பணிபுரியும் வேதியியல் மற்றும் இயற்பியல் துறை அறைகளுக்கு சென்று அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
பேராசிரியர்களின் அறையில் இருந்த ஏசி, லேப்டாப், கணினிகள், மேசை நாற்காலிகள், கண்ணாடி கதவுகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. விரிவுரை யாளர் மற்றும் நூலகரின் கார் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.