நாட்டிலேயே மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு மட்டுமே ஜப்பான் நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் பெற உள்ளது. நேரடி யாக நிதி ஒதுக்காமல் கடன் பெறும் நடைமுறையால் கட்டுமானப்பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ரூ.1264 கோடியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் என்று 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நாட்டின் மற்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கி கட்டு மானப்பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஆனால், தமிழ கத்துக்கு அறிவிக்கப்பட்ட மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்காமல் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் பெற்று அந்த நிதியைக் கொண்டே கட்டு மானப் பணிகளைத் தொடங்க உள்ளது.
இந்த நிதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசிடமிருந்து மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி கிடைக் காமல் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரே நேரில் வந்து அடிக்கல் நாட்டிச் சென்ற பிறகும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்து வமனை இன்னும் ஆய்வு அளவிலே நிற்கிறது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக தோப்பூரில் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கிய 224.42 ஏக்கர் நிலத்தை தமிழக சுகாதாரத் துறை சமீபத்தில்தான் மத்திய சுகாதாரத் துறை வசம் ஒப்படைத்தது. மத்திய மருத்துவக் கட்டுமானப் பணிகள் நிறுவனம், தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டி டப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஆனால், நிதி இன்னும் ஒதுக்கப்படாததால் ‘எய்ம்ஸ்’ கட்டுமானப்பணி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, நிலம் ஒதுக்கீடு செய்வதில் தொடக்கத்தில் தாமதம் ஏற்பட்டிருந்தது. தற்போது நிலம் ஒதுக்கப்பட்டு கடன் வழங்கக்கூடிய ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனமும் வந்து மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து சென்றுள்ளது. இனி அவர்கள் கடன் வழங்குவதுதான் பாக்கி. அதில், கிடைக்கும் கடன் போக மீதி நிதியை மத்திய அரசு வழங்கும். கடந்த 3 மாதங்களாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. அதற்காக நானும், மத்திய, மாநில அரசின் சுகாதா ரத்துறை அதிகாரிகளைச் சந்தித்து, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி வருகிறேன், என்று கூறினார்.
சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டிலேயே தமிழக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பான் நாட்டு நிறு வனம் கடன் வழங்குகிறது. அந்நிறுவனம் நிதியை எப்படி கொடுக்கப்போகிறது எவ்வளவு கொடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
அதன்பிறகுதான் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். இந்தக் கடன் பெறும் விவகாரம் எளிதாகவும், விரைவாகவும் நடப்பது மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதன் மக்கள் பிரதிநிதிகள் கையில்தான் உள்ளது, என்றார்.
- ஒய்.ஆண்டனி செல்வராஜ்