நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை அரசு மருத்துவரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவர் வெங்கடேசன். நீட் தேர்வில் ஆள்மாறாட் டம் செய்த புகாரில் இவரையும், இவரது மகன் உதித் சூர்யாவையும் சிபி சிஐடி போலீஸார் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர் நீதி மன்ற கிளையில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று விசாரித்தார். ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்த்த நிலையில், மனுவை திரும்பப் பெறுவதாக வெங்கடேசன் தரப்பில் கூறப்பட் டது. அதற்கு அனுமதி தந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.