தமிழகம்

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு டெங்கு பரிசோதனை

செய்திப்பிரிவு

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்றுசிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்குழுவினர் அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.

சில மணி நேரம் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால், இவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT