தமிழகம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

செய்திப்பிரிவு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று அளித்த புகார் மனு:

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்காக திமுகவினர் மற்றும் அவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று பேசியுள்ளார். இது இந்திய தண்டனைச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பேச்சின் மூலம், அதிமுகவின் வெற்றிக்காக, தேர்தலின்போது அவர் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவரது பேச்சு தேர்தல் வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது. அதை தடுக்கவும், தேர்தல் வெளிப்படையாக நடைபெறவும் உரிய உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT