தமிழகம்

அதிமுக அசைக்க முடியாத கோட்டை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இ.ஜெகநாதன்

காரைக்குடி

‘‘தமிழகத்தில் அதிமுக அசைக்க முடியாத எஃக்கு கோட்டையாக உள்ளது,’’ என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக அசைக்க முடியாத எஃக்கு கோட்டையாக உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வாம் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

வியக்கத்தக்க வகையில் பல்வேறு திட்டப் பணிகளை செய்ததால் தான் நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று வரலாறு படைத்தோம்.

முதல்வரின் பணியை இந்திய நாடே வியந்து பார்க்கிறது. சீன அதிபர், இந்தியப் பிரதமர் தமிழக அரசை புகழ்ந்து பேசியுள்ளனர். அதுவே அதிமுக அரசுக்கு கிடைத்த நற்சான்று தான்.

அரசை பற்றி மற்றவர்கள் சொல்வது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை, என்று கூறினார்.

SCROLL FOR NEXT