உள்ளாட்சித் தேர்தலோடு திமுக என்கிற கட்சி இருக்காது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இன்று (நவ.18) முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அனைத்துத் தரப்பு மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்க இருக்கிறோம். அதற்கு, மக்கள் நிச்சயமாக எங்களுக்கு வாக்களிப்பார்கள்.
மற்றவர்களைப் பொறுத்தவரை அனைவரும் தூக்கியெறியப்படுவார்கள். திமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுக மீது சொன்னாலும், இந்த உள்ளாட்சித் தேர்தலோடு திமுக என்கிற கட்சி இருக்காது என்பதை தெளிவாகக் கூறுகிறேன். ஏனென்றால், அந்த அளவுக்கு திட்டங்களை நாங்கள் போட்டி போட்டு மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.