தமிழகம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஆர். கண்ணன் பொறுப்பேற்பு: அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஆர். கண்ணன் இன்று (திங்கள்கிழமை) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய வந்த அ.சிவஞானம் அண்மையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்குப் பதிலாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையராக பணியாற்றி வந்த ஆர்.கண்ணன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.

விருதுநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் 22 ஆட்சியராக ஆர். கண்ணன் இன்று காலை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முந்தைய மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அதைத் தொடர்ந்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் புதிய மாவட்ட ஆட்சியர் ஆர். கண்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பொறுப்பேற்றக் கொண்ட பின்னர் முந்தைய ஆட்சியர் சிவஞானத்தை வாசல் வரை வந்து காரில் ஏற்றி வழியனுப்பிவைத்தார் புதிய ஆட்சியர் கண்ணன்.

SCROLL FOR NEXT