தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் நடந்த சிறப்பு யாகத்தில் நடிகர் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா குடும்பத்துடன் கலந்து கொண்டார். 
தமிழகம்

ரஜினி 2020-ல் கட்சி தொடங்குவார்: சகோதரர் சத்தியநாராயணா தகவல்

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் 2020-ல் அரசியல் கட்சி தொடங்குவார் என தருமபுரியில் அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாளையொட்டி, தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவர் கோயிலில், அவர் நீண்ட ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட வேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது. ரஜனிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா மற்றும் குடும்பத்தினர் சார்பில் நடந்த பூஜையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை கள் நடந்தன.

இதன் பின்னர் சத்தியநாரா யணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஜினிகாந்த் மட்டுமின்றி நாட்டு மக்களும் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இந்த யாகம், பூஜைகள் நடந்தன. ரஜினிகாந்த் 2020-ல் அரசியல் கட்சி தொடங்குவார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என ஏற்கெனவே அவர் கூறியுள்ளார். எதற்கும் ஆசைப்படாத அவர் முதல்வரானால், மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு தேவையா னதை செய்து கொடுப்பார். காலபைரவரின் அழைப்பால் நாங்கள் இங்கு வந்து யாக பூஜைகள் மற்றும் அன்னதானம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT