தமிழகம்

தமிழகத்தில் அனைத்து சமயத்தினரும் அண்ணன்,  தம்பியாக வாழ்ந்து வருகின்றனர்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அனைத்து சமயத்தினரும் அண்ணன் தம்பியாகவும், மாமன் மச்சான்களாகவும் வாழ்ந்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மிலாது நபி மதநல்லிணக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி, சிறுபான்மையினருக்கு என்றும் அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்றார்.

“நாம் அனைவரும் தமிழ்நாட்டில் இருக்கிறோம், இந்தியாவில் இருக்கிறோம் நம்மைப் பொறுத்தவரையில் அனைவரும் சகோதரர்கள், அண்ணன் தம்பிகள்தான். இதற்கு முன்பாக பல்வேறு மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள், அதில் அனைத்து மதத்தினரும் இருந்துள்ளனர்.

அன்றைக்கெல்லாம் பார்த்தோமானால் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்று ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர்” என்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

SCROLL FOR NEXT