சட்டப்பேரவையில் நேற்று வேளாண்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதில ளித்து பேசியபோது அமைச்சர் வைத்திலிங்கம் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் 30 மண் பரி சோதனை நிலையங்கள், 16 நட மாடும் மண் பரிசோதனை நிலை யங்களுக்கு அதிநவீன ஆய்வு உபகரணங்கள் வாங்கி ஆய் வகத்தை வலுப்படுத்த ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் வீரிய ஒட்டு தென்னை நாற்றுப்பண்ணை உருவாக்க ரூ.86.32 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இதற்கான 15 ஏக்கர் நிலத்தையும் அரசே வழங்கும்.
புதிய கட்டிடம்
வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 7 மண் ஆய்வுக் கூடங்கள், 6 உர கட்டுப்பாட்டு ஆய்வகங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.7.80 கோடி ஒதுக்கப்படும். தமிழகத்தின் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய 22 மாவட்டங்களில், உகந்த கிராமங்களை தேர்வு செய்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி ரூ.5 கோடி செலவில் மாதிரி காய்கறி கிராமங்களாக தரம் உயர்த்தப்படும்.
நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்காவை சர்வதேச தரத்துக்கு உயர்த்த, உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்க ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கப்படும். நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், நாகை மாவட்டங்களில் சிறுதானியம், பயறு, தென்னை, மாங்கனி, மக்காச் சோளத்துக்காக ரூ.3.43 கோடியில் 8 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கள் அமைக்கப்படும். கன்னியா குமரி மாவட்டம் தோவாளையில் 40 கடைகளுடன் கூடிய மலர் வணிக வளாகம் அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.