கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தில் 4,800 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு: மத்திய சுகாதாரத் துறை தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 4,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. டெங்குவின் தீவிரத்தால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த புள்ளிவிவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாடுமுழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 91,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 14,139 பேரும், மகராஷ்டிரா மாநிலத்தில் 9,899 பேரும், உத்தரகாண்டில் 9,574 பேரும், தெலங்கானாவில் 8,917 பேரும், குஜராத்தில் 8,410 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், டெங்குவால் கேரள மாநிலத்தில் 16 பேரும், கர்நாடகாவில் 13 பேரும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா 12 பேரும் இறந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 4,800 பேர் பாதிக்கப்பட்டதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT