தமிழகத்தில் அடுத்த சில தினங் களுக்கு மழை குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 வாரங் களாக ஒருசில இடங்களைத் தவிர குறிப்பிடும்படியாக எங்கும் மழை பெய்யவில்லை. காற்று சுழற்சிகளும் உருவாகவில்லை. இதனால் பல நாட்கள் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலை யில் அடுத்த சில தினங்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசனி டம் கேட்டபோது, அவர் கூறிய தாவது:
தமிழக பகுதியில் எங்கும் காற்று சுழற்சி இல்லை. கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதமும் குறைவாக உள்ளது. அதனால் அடுத்த சில தினங்களுக்கு மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை, ராம நாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறினார்.