சென்னை பாண்டிபஜார் பகுதியில் நடைபாதையை அகலப்படுத்துவதற்காக அரசமரத்தடியில் உள்ள விநாயகர் சிலை மற்றும் பீடம் ஆகியவை நேற்று அகற்றப்பட்டன.படம்: ம.பிரபு 
தமிழகம்

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி தியாகராய நகர் நடைபாதை வளாகத்தில் அஞ்சலகம் அருகே விநாயகர் சிலை அகற்றம்

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை தியாகராய நகர் நடைபாதை வளாக பகுதியில் இருந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மாநகராட்சி நிர்வாகம் நேற்று அகற்றியது.

சென்னை மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்ரூ.39 கோடியே 86 லட்சம் செலவில் நடைபாதை வளாகமும், ரூ.19 கோடியே 11 லட்சம் செலவில் 23 ஸ்மார்ட் சாலைகளும் அமைக் கப்பட்டுள்ளன. இவை பொது மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்துவிடப்பட்டன.

இத்திட்டத்தின்கீழ் தியாகராய சாலை நவீன முறையில் அழகு படுத்தப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் தியாகராய நகர் அஞ்சலகம் அருகில் அரச மரத் தடியில் விநாயகர் சிலை ஒன்று நிறுவப்பட்டு பல ஆண்டுகளாக பக்தர்களால் வழிபாடு செய்யப் பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த விநாயகர் சிலையை மாநகராட்சி அலுவலர் கள் நேற்று அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதிமக்கள், மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், மாநகராட்சி அலுவலர்களுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் எதிர்ப் பையும் மீறி மாநகராட்சி நிர்வாகம், விநாயகர் சிலையை அகற்றியது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, "இந்த விநாயகர் சிலை கடந்த 40 ஆண்டுகளாக உள்ளது. ஏராள மான பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். தியாகராய சாலையை அழகுபடுத்த நினைக் கும் மாநகராட்சி நிர்வாகம், அந்த இடத்தையே கோயிலாக அழகு படுத்தி இருக்கலாம். அதை விடுத்து, அங்குள்ள சிலையை அகற்றியது வேதனை அளிக்கிறது" என்றனர்.

இதுதொடர்பாக தகவல் பெற பலமுறை முயன்றும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

SCROLL FOR NEXT