சென்னை
ஆற்று மணல், வெளிநாட்டு மணலைவிட அதிக தரத்துடன் விலை குறைவாக இருப்பதால் எம்.சாண்ட் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கட்டிட கட்டு மான பூச்சுக்கான சிறப்பு எம்.சாண்ட் தயாரிப்பும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆற்று மணல் எடுக்க பல இடங்களில் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் ஆற்று மணல் வரத்து குறைந்துவிட்டது. வெளிநாட்டு மணல் கிடைத்தாலும் அதன் விலை அதிகமாக இருப்ப தாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட் டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை பிரிவு தலைவர் டபிள்யு. எஸ்.ஹபீப் கூறும்போது, “கட்டு மானப் பணிகளுக்கு ஆற்று மணல் போதுமான அளவு கிடைப் பதில்லை. அப்படியே கிடைத் தாலும் விலையும் அதிகமாக உள்ளது. வெளிநாட்டு மணலும் அப்படித்தான். அதனால், எம். சாண்ட் பயன்படுத்தத் தொடங் கினோம்.
இப்போது எங்கள் கூட்டமைப் பின் உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எம்.சாண்ட்தான் பயன்படுத்து கின்றனர். சுமார் 600 கட்டுமானத் திட்டங்களில் எம்.சாண்ட் பயன் படுத்தப்படுகிறது. அதிக தேவை இருப்பதால் எங்கள் கூட்டமைப் பின் உறுப்பினர்கள் சிலர் எம். சாண்ட் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள னர்’’ என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் 320-க்கும் மேற் பட்ட தொழிற்சாலைகளில் எம்.சாண்ட் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் 184 நிறுவனங்கள் அரசு அனுமதி பெற்று, உரிய தரத்துடன் தயாரிக்கின்றன. 60 நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட் டுள்ளன. மீதமுள்ள நிறு வனங்கள் அரசு அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன.
அரசு கட்டுமானப் பணி களுக்கு 80 சதவீதம் எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. பொது மக்களில் 70 சதவீதம் பேர் எம்.சாண்ட் உபயோகப்படுத்து வது தெரியவந்துள்ளது. தமிழ கத்தில் தினமும் 22 ஆயிரம் லோடு எம்.சாண்ட் தயாரிக்கப் படுகிறது.
தற்போதைய நிலவரப்படி சராசரியாக 100 வீடுகள் கட்டப் படுகிறது என்றால், அதில் 60 வீடு கள் எம்.சாண்டில் கட்டப்படுகின் றன. இதனால் ஆற்று மணல் பயன்பாடு வெகுவாகக் குறைந் துவிட்டது.
எம்.சாண்ட்டை கட்டிட அடித் தளத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கட்டுநர்கள் கூறிவந்தனர். எம்.சாண்டை கட்டிட பூச்சுக்குப் பயன்படுத்தும்போது சரிவர ஒட்டுவதில்லை என்று புகார் கூறப்பட்டது. இதையடுத்து பிளாஸ்ட்டரிங் எம்.சாண்ட் என்ற புதிய ரகத்தை நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கின.
இந்த பிளாஸ்ட்டரிங் எம்.சாண்ட்டுடன் சைபெக்ஸ் (CYBEX-112) என்ற ரசாயனத்தை கலந்து கட்டிட பூச்சுக்குப் பயன் படுத்தினால் பூச்சு நயமாகவும், தரமாகவும் இருக்கும். குறிப்பாக மேற்கூரை பூச்சுக்கு மிகவும் சிறந்தது. பிளாஸ்ட்டரிங் எம்.சாண்ட் வந்த பிறகு எம்.சாண்ட் விற்பனை பன்மடங்கு அதிகரித் துள்ளதாக அதன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இ்வ்வாறு அவர் கூறினார்.