தமிழகத்தில் பயிற்சி முடித்த 9 ஐபிஎஸ் அதிகாரிகளை உதவி போலீஸ் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக எஸ்.சர் வேஷ் ராஜ், வேலூர் மாவட்டம் அரக்கோணம் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக எஸ்.சக்தி, விருதுநகர் மாவட்டம் விருதுநகர் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக அருண் பாலகோபாலன், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக என்.நாத், சேலம் மாவட்டம் சேலம் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக சுஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி உதவி போலீஸ் கண்காணிப்பாளராக ஜி.சுகுணா சிங், கோயம்புத்தூர் மாவட்டம் கருமாதம்பட்டி உதவி போலீஸ் கண்காணிப்பாளராக வேதா சலம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் கண்காணிப்பாளராக அரவிந்த் மேனன், திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.