விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோவில் பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ருத்ரன் (3). அமத்தூர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள தாத்தா மணிகண்டன் வீட்டுக்கு சென்றிருந்தார்.
கடந்த 30-ம் தேதி காலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ருத்ரன் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். வெகுநேரமாக அவனை காணாததால் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றி தேடினர்.
அப்பொழுது வீட்டின் அருகே உள்ள சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சிறுவன் ருத்திரன் விழுந்து இறந்தான்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மழை நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் ஒருவனின் பெற்றோருக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.