தமிழகம்

நான் திமுகவில் இல்லை; கட்சி பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?- முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி காட்டம்

இ.ஜெகநாதன்

காரைக்குடி

‘நான் திமுகவில் இல்லை ; திமுகவை பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்,’ என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை அவரது வீட்டில் மு.க. அழகிரி இன்று (புதன்கிழமை) சந்தித்தார். இருவரும் தனி அறையில் பத்து நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வெளியே வந்த மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், "நவ.15-ம் தேதி நடக்கும் ஹெச்.ராஜாவின் மகள் திருமண விழாவிற்கு என்னால் வர முடியாத காரணத்தால் முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வந்தேன். நான் திமுகவில் இல்லை. திமுகவை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். திமுக பொதுக்குழு குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறினார்.

சமீபத்தில் திமுக பொதுக்குழு நடந்து முடிந்தநிலையில் மு.க.அழகிரி, ஹெச்.ராஜாவை சந்தித்திருப்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

          
SCROLL FOR NEXT