கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகு தியை சேர்ந்தவர் நீத்து கிருஷ்ணா(28). மலையாள நடிகையான இவர், அமெ ரிக்கா செல்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று நேர்முகத் தேர்வுக்காக அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத் துக்கு அவர் வந்தார். விசா பெறுவதற் காக அவர் அளித்திருந்த ஆவணங்களை தூதரக அதிகாரிகள் சரிபார்த்தபோது அவை போலியானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து தூதரக துணை அதிகாரி லாரா, ராயப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
காவல் ஆய்வாளர் சத்தியசீலன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகி யோர் விரைந்து சென்று நீத்து கிருஷ்ணாவை பிடித்து விசாரணைக் காக போலீஸ் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். விசாரணையின்போது, “கேரளாவை சேர்ந்த ராஜூ என்ற சினிமா தயாரிப்பாளர் என்னை அணுகி, நீ நன்றாக நடனம் ஆடுகிறாய் அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறி னார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை என்றேன். ரூ.2 லட்சம் கொடுத் தால் இடைத்தரகர்கள் மூலம் விசா வாங்கி விடலாம் என்று அவர் கூறிய தின்பேரில் அந்த பணத்தை கொடுத் தேன். இப்படி மாட்டிக் கொள்வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை” என்று நீத்து கிருஷ்ணா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
நீத்து கிருஷ்ணாவுடன் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயற்சி செய்த கேரளாவை சேர்ந்த சுபாஷ், தஞ்சையை சேர்ந்த ஜபகர்அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த இடைத்தரகர்கள் ராஜீ, குஞ்சுமோன் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.