தமிழகம்

என்எல்சி நிரந்தர தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்: நேற்று இரவு முதல் பணிக்கு திரும்பினர்

செய்திப்பிரிவு

நெய்வேலி என்எல்சியில் ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரி கடந்த 39 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிரந்தர தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நேற்று (வியா ழக்கிழமை) இரவு 10 மணி ஷிப்ட் முதல் மீண்டும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் என்எல்சியில் பணியாற்றும் நிரந்தர தொழி லாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆர்ப்பாட்டம், முற் றுகை, உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொழிலாளர்கள் தரப் பில் 24 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டனர். என்எல்சி நிர்வாகம் தரப்பில் 10 சதவீத ஊதிய உயர்வு மட்டும் அளிக்க முடியும் என திட்டவட்டமாக கூறி வந்தது. இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங் கங்களான தொழிலாளர் முன் னேற்ற சங்கம், அண்ணா தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றுடன் என்எல்சி நிர்வாகம் சார்பாக விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து நெய்வேலியில் உள்ள மற்ற அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களான சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், ஐஎன்டியுசி, தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்களிடம் நேற்று விளக்கி கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஐஎன்டியுசி அலு வலக வளாகத்தில் தொடர் உண் ணாவிரத்தில் இருந்த தொழி லாளர்களிடம் சென்னையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த கருத்துகளை அதில் பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகி கள் தெரிவித்தனர். அப்போது, என்எல்சி நிர்வாகம் வழங்க முன்வந்துள்ள ஊதிய உயர்வை ஏற்க தொழிலாளர்கள் மறுத்தனர்.

இதைத் தொடர்ந்து, நெய்வே லியில் உள்ள ஐஎன்டியுசி அலு வலகத்தில் அனைத்து தொழிற் சங்கங்களின் அவசர ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடந்தது. என்எல்சி தொமுச தலைவர் திருமாவளவன் தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் ராஜ வன்னியன், அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்க செயலாளர் ராம. உதயகுமார், தலைவர் அபு உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தொழிலாளர்களிடம் ராஜவன்னியன் விளக்கினார்.

அடுத்த கட்ட போராட்டம்

அப்போது, அவர் கூறும்போது, “என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த 39 நாளாக நடந்துவரும் நமது வேலைநிறுத்தம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், நமது கோரிக்கை வெற்றி பெறவில்லை. நிர்வாகம் பிடிவாத போக்கை கடைப்பிடிப்பதால் நாம் கேட்ட ஊதிய உயர்வை பெற முடிய வில்லை. ஆண்டுக்கு ரூ.1,500 கோடி லாபம் ஈட்டும் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 24 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதில் தப்பில்லை என இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

நமது உணர்வுகளை புரிந்து கொள்ளாத என்எல்சி நிர்வாகத் துக்கு சமயம் வரும்போது பாடம் புகட்டுவோம். தொழிலாளர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சென்னையில் போட இருந்த ஒப்பந்தத்தை புறக்கணித்து விட்டோம்.

எனினும், தொழிலாளர் நலன் கருதி வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகி றோம். என்எல்சி நிர்வாகம் ஒரு வாரத்துக்குள் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

இதையடுத்து, என்எல்சி நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 39 நாட்களாக ஈடுபட்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணி ஷிப்ட் முதல் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

SCROLL FOR NEXT