தமிழகம்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு: ஆட்சியர் எ.சுந்தரவல்லி தகவல்

செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு 19-ம் தேதி வரை நடக்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி மேற் கொள்ளப்படவுள்ளது.

எனவே, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் குடும்ப அட்டை, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வரவேண்டும். இம்மாதம் 19-ம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கும். பதிவு செய்பவர் களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்பட்ட முதல்நாளே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

மேலும் >http://www.tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வாயிலா கவும் பதிவுசெய்யலாம்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் அனை வரும் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT