தமிழகம்

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க பள்ளிகளில் விரைவில் சிறப்பு முகாம்: தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு

செய்திப்பிரிவு

ஆதார் அட்டை இல்லாத மாண வர்களுக்கு வழங்கும் வகையில் பள்ளிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஏற்பாடு செய்து வருகிறது.

தொடக்கக் கல்வி இயக்ககத் தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள் ளன. இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களிடமிருந்து தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தால் பெற்றோருக்கு வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டின் நகலை சேகரித்து தயாராக வைத்திருக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மாண வர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒப்புகைச்சீட்டு நகல் எண்ணிக்கை விவரங்களை மின்னஞ்சல் மூலம் 21-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி களுக்கு அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT