என். சன்னாசி
மதுரை
மதுரை மாநகரில் குற்றச்சம் பவங்களை தடுக்க தங்களுக்குள் வாட்ஸ் ஆப் குரூப் ஏற்படுத்தி ஒருங்கிணைந்து செயல்பட எஸ்.ஐ.க்களுக்கு காவல் ஆணை யர் டேவிட்சன் தேவா சீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை நகரில் 22 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. நகரில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் முன்கூட்டியே சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவ ங்களைத் தடுக்க, நுண்ணறிவு பிரிவு (ஐஎஸ்) போலீஸாரும் பணிபுரிகின்றனர்.
இருப்பினும், குற்றச் செய ல்களை கண்காணித்து முன் கூட்டியே தடுக்க, நகரில் 100 வார்டுகளிலும் 100 எஸ்.ஐ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்க ளிடம், குற்றச்செயல்களை தடுக்க வேண்டும். சாலைப் பழுது, சாக்கடை, மின்சாரம் உள்ளிட்ட பிறதுறை தொடர்பான பிரச்சி னைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். பிரச்சினைகள் குறித்து முன் கூட்டியே காவல் நிலை யங்களுக்கு தகவல் கொடுத்து துரித நடவடிக்கைக்கு உதவ வேண்டும்.
ஒவ்வொரு வார்டிலும் பொது மக்கள், அமைப்பு ரீதியான நிர்வாகிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினரிடம் இருந்து பல தகவல்களை துரிதமாகப் பெறும் வகையில் தங்களுக்குள் வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் ஏற்கெனவே அறி வுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்கள், சமூக விரோதச் செயல்களைத் தடுக்கவும், அது பற்றிய தகவல்களை துரிதமாக காவல்நிலைய போலீஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையிலும், ‘வாட்ஸ்-ஆப்’ குரூப் ஒன்றை ஏற்படுத்தி செயல்பட வார்டு எஸ்ஐக்களுக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, வார்டுகளில் உள்ள முக்கிய நபர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அரசியல், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், அரசுத் துறையினர் உட்பட சமூக அக்கறை கொண்டவர்களை வார்டு எஸ்ஐக்கள் தங்களது செல் போனில் ஒருங்கிணைத்து புதிதாக ‘வாட்ஸ்-ஆப்’ குரூப் உருவாக்கி உள்ளனர்.
இதுபற்றி காவல்துறை அதி காரி ஒருவர் கூறியதாவது: நகரில் குற்றச் செயல்களை தடுக்க, பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
பிரச்சினை நடந்தபிறகு காவல் துறையினரின் கவனத்துக்கு வருவதைவிட, முன்னதாகத் தடுக்கவே வார்டு எஸ்ஐக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வார்டிலும் வசிக்கும் மக்களின் அன்றாட முரண்பாடான நடவடிக்கைகள், பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றச் செயல்தடுப்பை மேற்கொள்கிறோம். இதற்கு பொதுமக்களும் போலீஸாருக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.
வழிப்பறி, திருட்டுகளைத் தடுக்க, வார்டு மக்கள் பங்களிப்பில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.