சென்னை
பினாமி பரிவர்த்தனைகள் தடைச் சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு சொந்த மான ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை பண மதிப்பிழப்பு செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் கருப்பு பணம் வைத்திருந்தவர்களில் சிலர் போலியான நிறுவனங்கள் தொடங்கி, பணத்தை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த வருமான வரித் துறை, 2017-ம் ஆண்டு நவம்பரில் ‘ஆபரேசன் கிளீன் மணி’ என்ற பெய ரில் நாடு முழுவதும் சோதனை நடத் தினர். இதில், சசிகலா மற்றும் அவ ரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் 5 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி னர். சோதனையின் முடிவில் கணக் கில் காட்டப்படாத பணம், ஏராள மான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங் களை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டது. சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலு வலகத்தில் அந்த ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட் டன. இதில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் 60 போலி நிறுவனங் களை நடத்தி வருவது கண்டுபிடிக் கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த போலி நிறுவனங்கள் மூலம் பல கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், பினாமி பெயர் களில் ஏராளமான சொத்துகளை வாங்கியிருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சசிகலா மற்றும் அவரது குடும் பத்தினர் ரூ.1,600 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கி யிருப்பது வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங் களை சசிகலா தனது பெயரிலோ அல்லது தனது குடும்பத்தினர் பெயரிலோ பதிவு செய்து மாற்றம் செய்து கொள்ளவில்லை. அதற்கு பதில் அந்த நிறுவனங்களின் உரிமை யாளர்களின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதித் தார். ஆனால், அந்த நிறுவனங் களை தனது கட்டுப்பாட்டில் வைத் திருந்ததாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். சசிகலா மொத்தம் 9 நிறுவனங்களை பினாமி பெயரில் வாங்கிய தாக கூறப்படுகிறது.
அப்போலோவில் ஜெயலலிதா
சசிகலா இந்த நிறுவனங்களை வாங்கியபோது ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில்தான் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அப்போது, பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி அவர் இந்த சொத்துகளை வாங்கிய தாக கூறப்படுகிறது. பினாமி பெயர்களில் நடத்தப் பட்டு வரும் நிறுவனங்களை முடக்கி வைக்க வருமான வரித்துறையினர் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கார் ஓட்டுநர்கள், உதவி யாளர்கள் உள்ளிட்ட வீட்டுப் பணி யாளர்களின் பெயர்களில் பினாமி சொத்துகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள் ளது. அதைத் தொடர்ந்து சென்னை, புதுச்சேரி, கோவை ஆகிய இடங் களில், சசிகலாவுக்கு சொந்த மானது எனக் கூறப்படும் ரூ.1,600 கோடி மதிப்புள்ள 9 சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள் ளன. பினாமி பெயர்களில் உள்ள நிறுவனங்களை கையகப்படுத்தி இருப்பதை சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் மறுப்பு
வருமான வரித்துறையின் கீழ் வரும், பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரிவு அதி காரிகள், சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பான உத் தரவை சம்மந்தப்பட்ட சார் பதிவாளர்களுக்கும், கம்பெனிகள் பதிவாளருக்கும் அனுப்பியுள்ள னர். ஆனால், இந்த தகவல்கள் அனைத்தையும் சசிகலாவின் வழக் கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மறுத்துள்ளார்.