தமிழகம்

நாய்கள் குறுக்கே பாய்வதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிப்பு: மதுரையில் 6 மாதத்தில் 10 பேர் பரிதாப மரணம்

செய்திப்பிரிவு

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் சாலைகளில் நாய்கள் குறுக்கே பாய்ந்து நிகழ்ந்த விபத்துகளால் 10 பேர் வரை உயிரிழந்துள்ள தகவல் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் 2013-ம் ஆண்டு 43,350 தெரு நாய்கள் மட்டுமே இருந்தன. தற்போது அவை அதிகரித்துவிட்டதால் அ தனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து விட்டன. கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் மாந கராட்சியில் மட்டும் 73,000 தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது. புறநகர்களையும், கிராமங்களை யும் சேர்த்து கணக்கிட்டால் லட்சம் எண்ணிக்கையைத் தாண் டும்.

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அவற்றைக் கருத்தடை செய்யும் மாநகராட்சியின் திட்டமும் கை கொடுக்கவில்லை. இதனால் தெரு நாய்கள் எண்ணிக்கை வேக மாகப் பெருகிவிட்டது.

தெரு நாய்களால் கடிபட்டு மாதம்தோறும் 150-க்கும் மேற்பட்டோர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகின்றனர்.

தெரு நாய்கள் கடிப்பதோடு மட்டுமில்லாது அவ்வப்போது சாலைகளில் குறுக்கே பாய்ந்து வாகன விபத்துகளையும் ஏற்படுத்தி வருகின்றன. கண் இமைக்கும் நேரத்தில் நாய்கள் சாலைகளின் குறுக்கே ஓடுவதால் இருட்டில் வேகமாக இருசக்கர வாகனங்களில் வருவோர் நாய்கள் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். அல்லது பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது.

கடந்த 6 மாதத்தில் மட்டும் மதுரை மாவட்டத்தில் தெரு நாய்கள் குறுக்கே பாய்ந்து நிகழ்ந்த விபத்துகளால் 10 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற் பட்டோர் பலத்த காய மடைந் துள்ளனர். கடந்த அக்டோபர் 27-ம் தேதி ஏ.ராமநாதபுரம் கிராமத்தில் செல்ல ம்பட்டியைச் சேர்ந்த ஜே.பிரதீப்(28) என்பவர் பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்து இறந்தார்.

திருமங்கலத்தில் நடந்த விபத்தில் விருதுநகரை சேர்ந்த எம்.கனிமொழி, மேலூர் அருகே தெற்குபட்டியில் நடந்த விபத்தில் கருத்த புளியம்பட்டியைச் சேர்ந்த எஸ். விக்னேஷ் (18) ஆகியோரும் இதேபோன்ற விபத்துகளில் உயிரி ழந்தனர். திருமங்கலத்தில் நடந்த விபத்தில் தனக்கன் குளத்தைச் சேர்ந்த ஆர். விஜயகண்ணன் (40), ஆகஸ்ட் 9-ம் தேதி உசிலம்பட்டி தேனி மெயின்ரோட்டில் நடந்த விபத்தில் கீழ இருப்பனூரை சேர்ந்த பி.பால்பாண்டி(55), கடந்த ஜூலை 5-ம் தேதி சமயநல்லூரில் நடந்த விபத்தில் கே.மாரிமுத்து (40), ஜூன் 8-ம் தேதி கீழவளவில் நடந்த விபத்தில் குருத்தூரைச் சேர்ந்த எம்.ராமமூர்த்தி(19) ஆகி யோர் உள்பட 10 பேர் இறந் துள்ளனர்.

பெருகிவரும் தெருநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வா கங்கள் சிறப்புக் கவனம் செலுத் தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி போலீ ஸார் கூறிய தாவது: சாலைகளில் செல்வோர் வேகத்தைக் குறைத் தாலே பாதி ஆபத்தை தவிர்த்து விடலாம். தெரு நாய்கள் குறுக்கே பாய்ந்து ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். நகர் பகுதியில் யாரும் இறப்பதில்லை. அதற்குக் காரணம் நகர் பகுதியில் நெரிசலால் 20 கி.மீ. முதல் 30 கி.மீ. வேகத்தில்தான் செல்ல முடியும். வேகமாக செல்லும் அளவுக்கு தரமான சாலையும் நகர் பகுதியில் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.அஜராக்கிரதையாக செல்லாதீர்கள்..!

டாக்டர் வள்ளியப்பன் கூறியதாவது: உள்ளாட்சி அமைப் புகள் தெருநாய்களை கருத்தடை செய்து எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதை தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். வாகனங்களில் செல்வோர் அஜாக்கிரதையாகச் செல்லக் கூடாது. விலங்குகள் சாலையைக் கடக்கும்போது வேகத்தைக் குறைக்க வேண்டும். நாய் மட்டுமில்லாது, மாடுகள் கூட குறுக்கே வரலாம். குழந்தைகளும் ஓடி வரலாம். நாம்தான் பார்த்து மெதுவாகச் செல்ல வேண்டும். விலங்குகளுக்கு அறிவு இல்லாவிட்டாலும், சிக்னல் போடும் இடங்களில் மனிதர்களுடன் சேர்ந்து நாய்களும் சாலையைக் கடப்பதை பலர் பார்த்திருக்கலாம். பெரும்பாலான விபத்துகள் மனிதத் தவறுகளாலேயே நடக்கின்றன என்றார்.

SCROLL FOR NEXT