தமிழகம்

பாஜக அரசு மீதான அணுகுமுறை: மே 29-ல் மதிமுக ஆலோசனை

செய்திப்பிரிவு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் 29.05.2014 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் காலை 11.00 மணிக்கும், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் கூட்டணி கட்சி என்ற முறையில், மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று பாஜகவை மதிமுக தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தது.

எனினும், மதிமுக பொதுச் செயலர் வைகோவின் வலியுறுத்தல்களுக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் பதவியேற்கும் மோடி என எவருமே செவிசாய்க்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபர் ராஜபக்‌சே வருகையை எதிர்த்து, டெல்லியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.

இந்த நிலையில், மத்தியில் பாஜக அரசின் செயல்பாடுகள் மீதான கட்சியின் அணுகுமுறை குறித்து இம்மாதம் 29-ம் தேதி மதிமுக ஆலோசிக்கும் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT