மறைந்த நெல் ஜெயராமனின் இயற்கை விவசாய பண்ணைக்கு அட்மா திட்டத்தின் கீழ் சிறந்த வேளாண் சேவைக்கான பரிசாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை பண்ணை நிர்வாகி ராஜீவிடம் வழங்குகிறார் வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன். 
தமிழகம்

ஆதிரங்கத்தில் உள்ள நெல் ஜெயராமனின் இயற்கை விவசாய பண்ணைக்கு பரிசு: சிறந்த வேளாண் சேவைக்காக வழங்கல் 

செய்திப்பிரிவு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே உள்ள ஆதிரங்கத் தில் மறைந்த நெல் ஜெயராமனின் இயற்கை வேளாண் பண்ணை உள்ளது. அட்மா திட்டத்தின் கீழ், இந்தப் பண்ணைக்கு சிறந்த வேளாண் சேவைக்கான சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

மறைந்த நெல் ஜெயராமனின் பண்ணையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பண்ணையை நிர்வகித்து வரும் ராஜீவிடம், திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநர் சுவாமிநாதன் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அட்மா திட்ட அலுவலர்கள் வேதநாயகி, சவுமியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் கூறியதாவது: இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் மேம்பாடு, சத்தான உணவு தானிய உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் மறைவுக்குப் பின்னர், பண்ணையை நிர்வகித்து வரும், இளம் விவசாயி ராஜீவ் தொடர்ச்சியாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, பாரம்பரிய விதை நெல் ரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி வருவதை பாராட்டி அட்மா திட்டத்தின் கீழ் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT