தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னையில் 6-ம் தேதி அதிமுக ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை

அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் வரும் 6-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரேயொரு தொகுதி யில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப் பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்தபோதும் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் அதிமுகவினர் சோர்வடைந்தனர். ஆனால், கடந்த ஆகஸ் டில் நடந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவு அதிமுகவினருக்கு உற்சாகத்தை அளித்தது.

மக்களவைத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற திமுக, வேலூர் தொகுதியில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர் தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. விக்கிரவாண்டியில் 44 ஆயிரம், நாங்கு நேரியில் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் பெற்ற வெற்றி, அதிமுகவினரின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. மக்களி டம் தங்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கு இன்னும் குறையவில்லை என அதிமுக வினர் கூறிவருகின்றனர்.

இதே உற்சாகத்தில், உள்ளாட்சித் தேர் தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வரு கிறது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப் படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள் ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக வரும் 6-ம் தேதி அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தை கட்சித் தலைமை கூட்டியுள்ளது. சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப் பாளரும், துணை முதல்வருமான ஓ.பன் னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள ரும், முதல்வருமான பழனிசாமி ஆகி யோர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது, அதற்கான முன்னேற்பாடு களைச் செய்வது, கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோ சனை நடத்தப்படும் என்று கூறப்படு கிறது. கூட்டணிக் கட்சிகள் சில மாநக ராட்சிகளைக் கோருவதால், அதுகுறித் தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது, அமைச்சரவை மாற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் இதுவரை பெரிய மாற்றம் எதுவும் செய்யப் படவில்லை. தற்போது முதல்முறையாக பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT