தமிழகம்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் 2 மேயர் இடங்களைக் கேட்கிறது பாஜக: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2 மேயர் இடங்களை பாஜக கேட்டுள்ளது என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை போரூரில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத் துவமனையில் உலர் விழி சிகிச் சைக்கான அதிநவீன சாதனங் களை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத் தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

அரபிக் கடலில் தற்போது 2 புயல்கள் உருவாகியுள்ளன. இத்தகைய இக்கட்டான சூழலில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களைப் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வரும் நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

225 படகுககளில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டு மகாராஷ்டிரா, கோவா, கேரளா உள்ளிட்ட இடங்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலுக்குச் சென்ற 6 படகுகளின் நிலை மட்டும் என்னவென்று தெரியாமல் இருந்தது. தற்போது கண்காணிப்பு விமானம் மூலம் அவை எங்குள்ளன என்பது கண்டறியப்பட்டு அதில் இருந்த மீனவர்களையும் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட 2 மேயர் இடங்களை பாஜக கேட்டுள்ளது. இதுபற்றி கட்சி தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும்.

இவ்வாறு மீன்வளத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT