சென்னை
உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மொழி வழி மாநிலம் பிரிக்கப் பட்டதைவிட தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடவேண்டும். இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாத கமாக இருக்காது. உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெரும்.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அதிமுக இடைத் தேர்தல் வெற்றியை கொண்டாடு வதென்பது வெகு தொலைவில் இருந்து நடந்துவந்தவன் களைப் பாறுவதற்கு விடும் பெருமூச்சு போல்தான். இடைத்தேர்தல் தோல்வி குறித்து திமுக பொதுக் குழுவில் ஆலோசிக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் திமுக தயாராக உள்ளது. நிச்சயம் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.