தமிழகம்

கீழடியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

செய்திப்பிரிவு

கீழடியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை விமான நிலையத்தில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டியளித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழர்களின் நாகரிகத்தின் அடையாளமாக திகழும் கீழடியில் பார்வையாளர்களும், சுற்றுலாவாசிகளும் பொதுமக்களும் அதிகம் கூடும் பட்சத்தில் சுற்றுலா துறை வல்லுநர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு தமிழக முதல்வரின் ஆணைப்படி விரைவில் கீழடியை சுற்றுலா தலமாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடும், ஆன்மிகமும் புண்ணியமும் நிறைந்த சுற்றுலா தலமான திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் பயணிகள், பக்தர்களின் வசதி, பாதுகாப்பிற்காகவும் அதி விரைவு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வகையில் தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

-எஸ்.ஸ்ரீநிவாசகன்

SCROLL FOR NEXT