சென்னை
நடிகர் செந்திலுக்கு சொந்தமான வீட்டை தனது வீடு எனக்கூறி குத்தகைக்கு விட்டு முறை கேட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.
நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு சென்னை சாலிக் கிராமத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 7 வீடுகள் கொண்ட இந்த குடியிருப்பை, சகாயராஜ் என்பவருக்கு செந்தில் வாடகைக்கு விட்டுள்ளார். சகாயராஜ், செந்திலுக்கு தெரியா மல் இதிலுள்ள ஒவ்வொரு வீட் டையும் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பல்வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.
இதுகுறித்து தெரியவந்ததும், மோசடியில் ஈடுபட்டதாக சகாயராஜ் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் செந்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சகாயராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.