கோப்புப் படம் 
தமிழகம்

பயணி தவறவிட்ட 25 பவுனை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

செய்திப்பிரிவு

சென்னை

விருகம்பாக்கத்தில் ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட 25 பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒப்படைத்தார்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் சாலிகிராமத் தில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள ஆட்டோவில் சென்றார். திருமண மண்டபத் துக்குள் சென்று பார்த்த போது 25 பவுன் நகைகள் வைத்திருந்த கைப்பை மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் ஜெய்பாலாஜி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது விஜயலட்சுமி பயணம் செய்த ஆட்டோவின் ஓட்டுநரான உதயகுமார் அங்கு வந்து, விஜயலட்சுமி தவறவிட்ட 25 பவுன் நகைகள் இருந்த பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பயணி தவறவிட்ட நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் பாராட்டினர்.

SCROLL FOR NEXT