சென்னை
மழையின்போது விழும் மரங்களை அகற்றத் தேவையான அறுவை இயந்திரங்கள், தேங்கும் நீரை வெளியேற்றும் மோட்டார் பம்ப்கள், ஜெனரேட்டர், நோய் தடுப்பு மருந்து களை தயார் நிலையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதய குமார் உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக சென்னை மாந கராட்சி வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி, திருவள் ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தொற்று நோய், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங் கேற்று ஆய்வு செய்தனர்.
சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், மாநகர காவல், தீயணைப்பு, மின்சாரம், பிஎஸ்என்எல், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று, மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்வழி கால்வாய்களில் தூர்வாரும் இயந்திரங்கள் மூலம் இதுவரை 37 ஆயிரம் டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழையின்போது விழும் மரங்களை அகற்றத் தேவையான சிறிய, பெரிய அறுவை இயந்திரங்கள், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற அதிக குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்ப்கள், ஜெனரேட்டர், மக்களுக்கு உணவு வழங்கத் தேவையான பொது சமையலறை மற்றும் பொருட்கள், தேவையான நோய்த் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் வசிக்கும் 200 தன்னார்வலர் கள், பேரிடர் மீட்புக்கான பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை துறையின் ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பேரிடர் மீட்பு உபகரணங்கள், சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.
மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் 210 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச் சர்கள் கேட்டறிந்தனர். சென்னை மாநகராட்சியில் ரூ.445 கோடி மதிப் பில் 171 கி.மீ. நீளத்துக்கான மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அப்பணிகளை வரும் 30-ம் தேதிக்குள் முடிக்கு மாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தர விட்டார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் இரா.சீதாலட்சுமி, வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பால சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.