முருகன்: கோப்புப்படம் 
தமிழகம்

முருகனை நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு: 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை

தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி முருகனை அவரது மனைவி நளினி மற்றும் அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகன் தொடர் உண்ணவிரதத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், முருகனை தனிமை சிறையில் இருந்து விடுவிக்கக்கோரியும் அவரை அவருடைய மனைவி நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கக்கோரியும் முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (நவ.1) விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT