ஆம்பூர்
ஆம்பூரில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மீது மயக்கப்பொடி தூவி அவரை கொலை செய்ததாக கொள்ளுப் பேரன் மற்றும் அவரது நண்பரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (84). இவரது மனைவி ராஜம்மாள் (80). இவர்களுக்கு ஜெயலட்சுமி, சாந்தி உட்பட 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் மூத்த மகளான ஜெயலட்சுமி தனது குடும்பத் தினருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். சாந்தி உட்பட 2 மகள்கள் அதேபகுதியில் வசித்து வருகின்றனர். ராஜம்மாளின் கணவர் அர்ஜூனன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால், ராஜம்மாள் மட்டும் கொல்லமங்கலம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இவரை, சாந்தியின் கணவர் சாமிநாதன் தினசரி வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூருவில் உள்ள ஜெயலட்சுமியின் பேரன் மோனீஷ்(21) மற்றும் அவரது நண்பர்களான பெங்களூருவைச் சேர்ந்த வினய்(23), பிரிஷ்வால்(22) ஆகியோர் நேற்று முன்தினம் ராஜம்மாள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் ராஜம்மாளின் வீட்டுக்கு, சாமிநாதன் வந்துள்ளார். அப்போது, ராஜம்மாள் வாயில் ரத்தம் கசிந்து, தரையில் மயங்கிய நிலையில் கிடந்ததைக்கண்டு சாமிநாதன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது மனைவி சாந்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அனைவரும் அங்கு வந்து பார்த்தபோது ராஜம்மாள் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இறுதி சடங்குக் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது, பாட்டிக்கு சொந்தமான நகைகள், புடவைகளை எடுத்து வருவதற்காக சாந்தி வீட்டுக்குள் சென்றார். அப்போது, பீரோ இருந்த அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதை திறக்க முயன்றபோது உள்ளே சத்தம் கேட்டதால் அவர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே, பொது மக்கள் அந்த அறைக்கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு கொள்ளுப்பேரன் மோனீஷ் அவரது நண்பர் பிரிஷ்வால் ஆகியோர் ரத்தக்கறையுடன் அமர்ந்திருந்தனர்.
மயக்கப்பொடி தூவி...
உடனே, அவர்களை பிடித்து விசாரித்தபோது, நகை, பணத்துக்காக ஆசைப்பட்டு பாட்டி ராஜம்மாள் மீது மயக்கப்பொடி தூவியும், கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித் தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் ஆம்பூர் துணை காவல் கண் காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையிலான காவல் துறை யினர் அங்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோனீஷ், பிரிஷ்வால் ஆகியோரை கைது செய்தனர். மேலும், நகை, பணத் துடன் தப்பியோடிய வினய்யை தேடி வருகின்றனர்.