தமிழகம்

முன்னாள் மேயர் கொலை வழக்கு: திமுக பிரமுகர் மகனுக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப் பட்ட வழக்கில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் தன்னாசி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது மகன் கார்த்திகே யனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (65). இவரது கணவர் முருக சங்கரன் (74), பணிப்பெண் மாரியம்மாள் (35) ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சங்கரன்கோவிலைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம் மாளின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜா அப்பகுதி யில் நடமாடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கார்த்திக் ராஜாவை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசா ரணை நடத்தினர். கொலைச் சதியில் சீனியம்மாள் (59), அவரது கணவர் தன்னாசி (60) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரையில் இருந்த இவர்கள் இருவரையும் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜாவுக்கு, திருநெல் வேலி மாவட்ட முதலாவது குற்றவி யல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு ஜாமீன் வழங்கி நேற்று உத்தர விட்டார். வழக்கில் 90 நாட்கள் ஆகி யும் சிபிசிஐடி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப் பட்டதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT