தமிழகம்

பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

மதுரை

நாட்டுப்புறப்பாடகி பரவை முனியம்மாளுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

மதுரை அருகேயுள்ள பரவையைச் சேர்ந்தவர் நாட்டுப் புறப்பாடகி பரவை முனியம்மாள். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர், திரைப்படங்களில் நடிக்காமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகும் அவரால் பேசவும் முடியவில்லை. காதும் கேட்கவில்லை.

தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினருக்குப் போதிய பொரு ளாதார வசதியில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் அவரது குடும்பத்தினர் மதுரை ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கு, நடிகர் அபி சரவணன் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT