கோவை
கோவையில் மனைவிக்கு தலாக் கூறிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை போத்தனூர் அருகேயுள்ள அம்மன் நகரைச் சேர்ந்தவர் வாஜியா (24). இவர், கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார். அதில்,‘‘அன்னூர் கே.கே.வீதியைச் சேர்ந்த முகமது அலிக்கும், எனக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத் துக்கு பின்னர் கணவர் முகமது அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு செய்தனர். கடந்த சில தினங் களுக்கு முன்னர் கேரளா மாநிலத்தின் ஆலுவா அருகேயுள்ள செராய் பீச்சுக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு வைத்து கணவர் எனக்கு தலாக் கூறினார். இது தொடர்பாக கணவர் முகமது அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
போத்தனூர் போலீஸார் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் முகமது அலி மற்றும் அவ ரது உறவினர்கள் என மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முத்தலாக் தடை தொடர்பான சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வந்தது.
மாநில அளவில் புதுக்கோட்டையில் இச்சட்டப்பிரிவின்கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது 2-வதாக கோவையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.