தமிழகம்

இன்று உலக சிக்கன நாள்; அஞ்சல் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர வேண்டும்: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை

மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறு சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதை யொட்டி முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்தி, சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ‘பொருள் வரும் வழி சிறியதாக இருந்தாலும், பொருள் போகும் வழி பெரியதாக இல்லையெனில், அதனால் தீங்கு இல்லை’ என்று சிக்கனமாக வாழ்தலின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

சேமிப்பின் அவசியத்தை பெற் றோர்கள் தங்களது பிள்ளை களுக்கு சிறு வயது முதலே எடுத் துரைத்து, சேமிக்கும் நல்ல பழக் கத்தை ஊக்குவிக்க வேண்டும். ‘இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு’ என்பதை கருத்தில்கொண்டு, மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்கால தேவைக்காக சேமிக்க வேண்டும்.

தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தை பாதுகாப்பானதும், அதிக வட்டி அளிக்கக் கூடியதுமான அஞ் சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம், சிறுகச் சிறுக சேமிக்கப் படும் தொகை பன்மடங்காகப் பெருகுவதுடன், நாட்டின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் அத்தொகை பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அஞ்சலகங்களில் செயல்படுத் தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT