தமிழகம்

பள்ளி வளாகங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

பள்ளி வளாகங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளின் குழிகளை தலைமையாசிரியர்கள் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத் தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித், பரிதாப மாக உயிரிழந்த சம்பவம் தமிழகத் தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயன்பாட்டில் இல்லாத ஆழ் துளைக் கிணறுகளை மூடுவதற் கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் படி பள்ளி வளாகங்களில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி வளாகங்களில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆழ் துளைக் கிணறுகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியவற்றைக் கண்ட றிந்து உடனே அதை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு மூடிய இடங்களை சிறப்பு எச்சரிக்கை குறியிட்டு அனைவருக்கும் தெரியும்படி அடையாளப்படுத்த வேண்டும். மேலும், ஏரி, குளம், கிணறு, ஆழ்துளைக் கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதுதவிர, பள்ளிகளில் இருக் கும் தேசிய பசுமைப் படை போன்ற இயக்க மாணவர்கள் மூலம் சுற்றுப் புறக் கிராமங்களில், பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி களை நடத்த வேண்டும். இது குறித்து எடுக்கப்பட்ட பணி விவரங் களை அறிக்கையாக அலுவலகத் துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT