கோப்புப்படம் 
தமிழகம்

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும்: பொறியாளர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு 

செய்திப்பிரிவு

சென்னை

பயன்பாட்டில் இல்லாத ஆழ் துளைக் கிணறுகள் மற்றும் திறந்த வெளிக் கிணறுளை 24 மணி நேரத் தில் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பாக மாற்ற, பொறியாளர் களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.நா.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 556 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்படுகின்றன. இதன்மூலம் 9 மாநகராட்சிகள், 66 நகராட்சிகள், 347 பேரூராட்சிகள், 48,948 கிராம குடியிருப்புகள் மற்றும் 4.23 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சென்னை தவிர இதர பகுதிகளுக்கு தினமும் 1,906 மில்லியன் லிட்டர் நீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாரியத்தின் மூலம் போடப்பட்டு தற்போது பயன் பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறு கள் மற்றும் நீர் உறிஞ்சுக் கிணறு கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதில் குழந்தைகள், ஆடு, மாடு ஆகியவை விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொறியாளர்கள், இவற்றை 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும்.

அதற்கான சாதகங்கள் இல்லாத பட்சத்தில் அவற்றை உடனே மூடிவிட வேண்டும். இல்லை யெனில் சம்பந்தபட்ட வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையே மழைநீரை சேகரிக்கவும் மற்றும் நீரா தாரத்தைக் கண்டறியவும் புவி - பவுதீக வரைபடம் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் ஆகியோரிடம் தரப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் சேகரிப்பு பணிகளுக்காக twadboardtn.gov.in என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மழைநீர் சேகரிப்பு குறித்த விளக்கப் படங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண், மின்னஞ்சல் விவரங்கள் இருக்கும். மேலும், twadboard என்ற பெயரில் முகநூல், ட்விட்டர் தளங்களிலும் இயங்கி வருகிறோம். மழைநீர் சேகரிப்பு தொடர்பான கேள்விகளை சமூக வலைதளங்கள் வழியாகவோ அல் லது மாவட்ட வாரிய அதிகாரிகளை நேரில் அணுகியோ உரிய ஆலோசனைகளைப் பெறலாம்.

இதுதவிர நிலையான நீடித்த பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப் பட்டுள்ளது.

இவற்றைப் பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சமூகப் பொறுப்பு குழுமங்கள் ஆகியவை தற்போது பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற, குடிநீர் வடிகால் வாரியத்திடம் தேவையான தொழில்நுட்ப உதவி களை பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர தகவல்கள் பெறும் மையத்தின் செல்போன் எண்ணை 9445802145 தொடர்பு கொண்டும் பயன் பெற லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT