ஈரோட்டில் போலி நிறுவனம் பெயரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்து மோசடி செய்தவர்கள் தீவிர வாத அமைப்பை சேர்ந்தவ ராக இருக்கலாம் என சந்தேகப் படுவதாக ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஈரோடு எஸ்.பி சிபி சக்கர வர்த்தியிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் என்.சிவநேசன், பொதுச் செயலாளர் வி.கே.கே.ராஜ மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையம் ஸ்ரீ குமரன் ஏஜென்ஸி என்ற நிறுவனத்தின் பங்குதாரர் என அறிமுகம் செய்த நபர் மற்றும் சிலர் ஈரோடு நகரில் செயல்படும் 30-க்கும் மேற்பட்ட கணினி விற்பனை நிறுவனங்கள், ஜெனரேட்டர் விற்பனை நிறுவ னங்களில் கடந்த 17, 18 மற்றும் 21-ம் தேதிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள் முதல் செய்தனர்.
இதற்கு ஜூலை 17-ம் தேதி யிட்ட காசோலைகளை அவர்கள் அளித்ததால் வியாபாரிகள் யாருக் கும் சந்தேகம் ஏற்படவில்லை. பண பரிவர்த்தனைக்கு வங்கிக ளுக்கு சென்றபோது, அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது தெரிந்தது. கொள்முதல் செய்தவர்களின் செல்போனை தொடர்புகொண்ட போது சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. வங்கிகளில் அந்நிறுவன முகவரி குறித்து விசாரித்தபோது கணக்கு தொடங்க அவர்கள் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது.
அவர்கள் கொள்முதல் செய்த பொருட்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொள்முதல் செய்தவர்கள் தேர்வு செய்த பொருட்களின் வகையை பார்க்கும் போதும் இதன் பின்னணியில் ஏதாவது தீவிரவாத கும்பல் இருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி நிறு வனம் பெயரில் பொருட்களை கொள்முதல் செய்து ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கொள்முதல் செய்த பொருட்கள்
வணிகர்கள் சிலர் கூறும்போது, “மர்ம நபர்கள் படகுகளில் பொருத்தி ஓட்டக்கூடிய 1 ஹெச்.பி. ஹேண்டா ஜெனரேட்டர், மோட் டார், கம்பரசர், ஒயர், இஞ்சின் ஆயில், லேப்டாப், பிரிண்டர், உயர் தொழில்நுட்பம் கொண்ட செல்போன், அலுமினியத்தில் குடியிருப்பு அமைக்க தேவை யான பொருட்கள், அலுமினிய ஏணி, உடற்பயிற்சி சாதனங்கள், வெள்ளை டீசர்ட், அரைக்கால் சட்டைகள், பெண்கள் உள்ளா டைகள், கட்டில், மேஜை உள் ளிட்ட வீட்டு உபயோகப் பொருட் களை கொள்முதல் செய்தனர்.
பொருட்கள் அனைத்தும் மது ரைக்கு லாரியில் அனுப்பப்பட்டு, அங்கிருந்து கடலாடிக்கு அனுப்பப் பட்டுள்ளது. அங்கு ராஜா என்ப வர் இதனைப் பெற்று கொண்டுள் ளார். மர்ம நபர்கள் தங்கள் பெயர் களை முத்துவேல், ராஜேஷ் என்று தெரிவித்தனர்’ என்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தில் விடுதலைப்புலி ஒருவர் பிடிபட்ட நிலையில், இந்த பொருட்கள் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிக்கு அனுப்பப் பட்டுள்ளதால், வணிகர்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.