உதயநிதி: கோப்புப்படம் 
தமிழகம்

குழந்தை சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள்: உதயநிதி இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை

சிறுவன் சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள் என, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இன்று (அக்.29) சடலமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட குழந்தையின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப் பின் அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சுஜித்தின் மறைவுக்கு உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "சிறுவன் சுஜித்தின் உலகில் நாம் அனைவருமே குற்றவாளிகள். 'இனி இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது' என்பதற்கான அடையாளமாக சுஜித்தின் மரணத்தை மனதில் ஏந்தி, அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நீ எங்கள் மனதில் வாழ்வாய் சுஜித், போய் வா. என் அஞ்சலிகள்," என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT