தமிழகம்

மிகவும் சவாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர்: மீட்புப் பணியை நேரில் பார்வையிட்ட ஜி.கே.வாசன் பேட்டி

செய்திப்பிரிவு

நடுக்காட்டுப்பட்டி

மிகவும் சவாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர் என குழந்தை சுஜித் மீட்புப் பணியை நேரில் பார்வையிட்ட ஜி.கே.வாசன் பேட்டியளித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெறும் பகுதிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று (அக்.28) நேரில் சென்றார்.

சிறுவன் சுஜித் மீட்புப் பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் அதிகாரிகளிடமும் கேட்டறிந்த அவர் குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "குழந்தை சுஜித்தை மீட்பது மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. கடினமான பாறையில் குழி தோண்டும் சவாலான பணியை மிகுந்த அர்ப்பணிப்புடன் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர். மீட்புப் பணிகள் தொய்வில்லாமல் நடந்து வருகிறது.

அமைச்சர்கள், அதிகாரிகள் நிகழ்விடத்திலேயே தங்கிக் கொண்டு செயல்படுகின்றனர். மீட்புப் பணியில் மத்திய மாநில அரசுத் துறைகள் ஈடுபட்டுள்ளன. இதற்குமேல் செய்ய முடியாது என்றளவுக்கு அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.

மிகுந்த எச்சரிக்கையோடு திறம்பட பணி நடைபெறுகிறது. இந்த பணி நல்ல பலனைத் தரவேண்டும் வெற்றிகிட்ட வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் நினைக்கிறது.

இதுபோன்ற அசாதாரண விபத்துகளை சமாளிக்கும் அதிநவீன கருவிகளை இறக்குமதி செய்யும் நிலை இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பணி வெற்றிகரமாக நடைபெற இறை ஆசி வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT