மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எழுத்தாளர்கள் இந்திரா பார்த்த சாரதி, ரவிகுமார், இரா.நடராசன், லட்சுமி சரவணகுமார், தமயந்தி, பெருந்தேவி, யுவன் சந்திரசேகர், மருதன், இரா.முருகன், பத்திரிகையாளர் ஞாநி, குமரேசன் உள்ளிட்டோர் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ள னர்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
யாகூப் மேமனுக்கு காலாவதியான தடை சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரிடம் அளிக்கும் வாக்குமூலத்தை வைத்து தண்டனை வழங்குவது நீதிக்கு புறம்பானது. யாகூப் மேமன் மனநிலை பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர்.
யாகூப் மேமன் சரணடைவதற்கு உதவி செய்த ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ராமன் அவருக்கு மரண தண்டனை கூடாது என வலியுறுத்தியுள்ளார். எனவே, தேசத்தின் மனசாட்சியாக விளங்கும் எழுத்தாளர்களின் குரலுக்கு மதிப்பளித்து யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குடியரசுத் தலைவர் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள னர்.