சென்னை
புத்தாடை உடுத்தியும், இனிப்புகளை பரிமாறிக் கொண்டும் தீபாவளி பண் டிகை இன்று கோலாகலமாக கொண் டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு, மத்தாப்புகளை கொளுத்தி மகிழ்ந்தனர். சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக ரயில், பேருந்து களில் சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமி ழகத்தில் தீபாவளி கொண்டாட்டம் கடந்த சில நாட்களாகவே களைகட்டத் தொடங்கியது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிப்பதால், அவர்கள் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக பேருந்து, ரயில்களில் புறப்பட்டுச் சென் றனர். இதனால், பேருந்து, ரயில் நிலை யங்களில் கடந்த சில நாட்களாகவே மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளியை முன்னிட்டு புத்தாடை, இனிப்புகள் விற்பனையும் களை கட்டியது. பிரதான வர்த்தகப் பகுதி களில் உள்ள ஜவுளிக் கடைகள், இனிப்பகங்களில் ஏராளமானோர் குவிந் தனர். சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு களின் காரணமாக, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையும் விறுவிறுப் பாக நடந்தது. இதையொட்டி, முக்கிய வர்த்தகப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில்,நேற்று காலை முதலே குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். நேற்று இரவு வானத்தை வண்ணமயமாக்கும் வாண வேடிக்கை களுடன் தீபாவளியை வரவேற்றனர்.
புத்தாடை, இனிப்புகளுடன் தீபாவளி திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பட்டாசு, மத்தாப்புகளை கொளுத்தி மகிழ்ந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு கோயில் களில் இன்று சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உற்சாக பயணம்
தீபாவளி பண்டிகை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் வந்தது பலருக்கும் ஏக்கமாக இருந்தாலும், நாளை திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவித்திருப்பது உற் சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து வெகு தொலைவுக்கு செல்பவர்கள் ஏற் கெனவே புறப்பட்டுச் சென்ற நிலையில், குறுகிய தூரம் செல்பவர்கள் மற்றும் ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைத்தவர்கள் கடைசி நேரத்தில் நேற்று புறப்பட்டனர். சென்னையில் இருந்து புதுச்சேரி, திருச்சி, கடலூர், விழுப்புரம், நாகை, சேலம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வடமாவட்ட மக்கள் நேற்று அதிக அளவில் பயணம் செய்தனர். திட்டமிட்டபடி கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து 1,510 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,735 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அலைமோதிய கூட்டம்
ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட அந்த்யோதயா முன் பதிவு இல்லாத விரைவு ரயிலிலும் மதுரை, நெல்லை வழியாக இயக்கப்பட்ட கொச்சுவேலி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தீபாவளியையொட்டி அரசு பேருந்துகளில் மட்டும் 6.5 லட்சம் பேர் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர். சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து களில் 2 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர் களுக்கு பயணம் செய்துள்ளனர்.